ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் OTT ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்கள் மூலம் இவற்றை ரசிக்க முடியும். இந்த வாரம் வெளியாகும் முக்கிய OTT ரிலீஸ்களில் Euphoria, Vadam, Mrithyunjay உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
'வடம்' - கிராமத்து உணர்ச்சி கதை
வடம் திரைப்படம், பாரம்பரியமான 'வட மஞ்சு விரட்டு' விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சி நிறைந்த கிராமத்து ஆக்ஷன் நாடகமாகும். ஒரு மனிதனுக்கும், அவன் வளர்க்கும் காளைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் விமல், நடராஜன் சுப்பிரமணியம், சங்கீதா கல்யாண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 3ஆம் தேதி Sun NXT-யில் வெளியாகிறது.
'Sampradayini Suppini Suddapoosani' - டார்க் காமெடி ட்விஸ்ட்
இந்த தெலுங்கு படம், ஒரு பஞ்சாயத்து செயலாளரை மையமாகக் கொண்ட கதை. தற்செயலாக ஒரு போலீஸ் அதிகாரி அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடைக்க, அதை மறைக்க முயற்சிக்கும் சம்பவங்கள் கதை நகர்த்துகின்றன. இதில் சிவாஜி, லயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 3ஆம் தேதி Netflix-ல் வெளியாகிறது.
'சித்தாரே ஜமீன் பர்' - உணர்ச்சி பயணம்
சித்தாரே ஜமீன் பர் திரைப்படம், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்புகள் குறித்து பேசும் ஒரு உணர்ச்சி நாடகம். ஆமீர்கான் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 3ஆம் தேதி SonyLIV-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
வெப் தொடர்கள் பட்டியல்
மாம்லா லீகல் ஹை சீசன் 2 Netflix-ல் வெளியாகி, நகைச்சுவை கலந்த நீதிமன்ற கதைகளுடன் ரசிகர்களை கவர வருகிறது. அதேபோல், XO, Kitty சீசன் 3 காதல், நட்பு மற்றும் வாழ்க்கை முடிவுகளை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக தொடர்கிறது. இந்த வார OTT வெளியீடுகள் பல்வேறு வகை ரசிகர்களுக்கும் ஏற்றதாக உள்ளன. கிரைம், எமோஷன், காதல், காமெடி என அனைத்து ஜானர்களும் உள்ளதால், இந்த வாரம் OTT ரசிகர்களுக்கு முழுமையான எண்டர்டெயின்மென்ட் கிடைக்கிறது.

