Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Puducherry Water Supply: புதுச்சேரியில் 6 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Puducherry Water Supply: புதுச்சேரியில் 6 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Puducherry Water Supply: புதுச்சேரி லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு தட்டாஞ்சாவடி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தட்டாஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.


குடிநீர் வினியோகம் நிறுத்தம்

அதேப்போல் லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு அசோக் நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் வருகிற 22-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அசோக் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கருவடிக்குப்பம்
கருவடிக்குப்பம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் நடைபெறும் பராமரிப்பு பணியால் வருகிற 24, 25-ந்தேதிகளில் கருவடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதிய வேளை குடிநீர் வினியோகம் இருக்காது.இதேபோல் குறிஞ்சி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வருகிற 29-ந்தேதியும், பாசக்குட்டை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி யில் ஜூலை 1-ந்தேதியும் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அந்த பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

சென்டாக் தர வரிசை பட்டியல்
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரி 2026-27-ம் கல்வி ஆண்டிற்காக நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மொத்தம் 10 ஆயிரத்து 810 இடங்கள் உள்ளன. இதற்காக தகுதியான மாணவ-மாணவிகளிடம் இருந்து சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில் மொத்தம் 14,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 12,288 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. இதில் புதுவை மாணவர்கள் 10,540 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ஒதுக்கீட்டில் 1,518, கிராமப்புற ஒதுக்கீட்டில் 776, ஜே.இ.இ. மூலம் 1,810 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்டாக் நிர்வாகம் தற்போது மாணவர்கள் சமர்ப்பித்த மதிப்பெண் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்து தற்காலிக தரவரிசை பட்டி யல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தனித்தனியாக வரைவு (தற் காலிக) தரவரிசை பட்டியல் நேற்று சென்டாக் இணைய தளத்தில் www.centacpuducherry.in. வெளியிடப்பட்டுள்ளது.

: பொள்ளாச்சியில் இன்று மின் தடை அறிவிப்பு.. 7 மணி நேரம் பவர் கட்

இதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் விண்ணப்பதாரர்கள் தங்களது டேஷ்போர்டு உள்ளே சென்று லாகின் செய்து வருகிற 20-ந் தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் தரவரிசைப் பட்டியல் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் தரவரிசைப் பட்டியல் ஆகியவை விரைவில் வெளியிடப்படும். இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த தகுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்னும் 2 வாரங்களுக்குள் முழுமையாக நிறைவடையும். பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் புதுவை அரசு இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். இதற்காக தரவரிசை பட்டியல் நுழைவுத்தேர் வுக்கு பிறகு தனியாக வெளியிடப்படும். தேர்வு நடத்தப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களின் மதிப்பெண்ணைச் சமர்ப்பிக்க போதுமான நேரம் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi