Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rathan Pandit: தவெக வெற்றியை கணித்த ரத்தன் பண்டிட் யார்... இன்னொரு நடிகரும் முதலைமச்சர் ஆவாராம்!

Rathan Pandit: தவெக வெற்றியை கணித்த ரத்தன் பண்டிட் யார்... இன்னொரு நடிகரும் முதலைமச்சர் ஆவாராம்!

TVK Vijay TN ELection Results 2026: நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யாருமே எதிர்பாராத வகையில், தமிழக வெற்றிக் கழகம் பெற்றி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த கட்சிகள் வெற்றி பெரும், யாருக்கு முதல்வர் ஆகும் யோகம் உள்ளது, யாருக்கு தோல்வி என்றெல்லாம் ஜோதிடர்கள் பரவலாக கணித்து வந்தனர். தவெக கட்சி பெற்றி பெற்றுள்ள நிலையில், தவெகவின் ஆஸ்தான ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் டிரெண்டாகி வருகிறார். விஜய்யின் வெற்றியை துல்லியமாகக் கணித்த ரத்தன் பண்டிட் யார், இன்னொரு முன்னணி நடிகரைப் பற்றிய இவரது கணிப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Rathan Pandit: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் கட்சியான TVK, 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியை, எந்தவொரு கருத்துக் கணிப்பும் கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் தேர்தலில் விஜய்யின் சுனாமியை ஒரே ஒருவர் கணித்திருந்தார்.

மே மாத ராசிபலன்

ரத்தன் பண்டிட் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஜோதிடர்களில் ஒருவர். இவருக்கு ஜோதிடத் துறையில், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. ஜாதகங்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில், தனிநபர்களுக்கான ஜோதிட ஆலோசனை, பொதுப்பலன்கள் மட்டுமில்லாமல், அரசியல் நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்யும் நேர்காணல்கள், சமூக ஊடகங்களிலும் யூடியூபிலும் பிரபலம்.
அரசியலில் ஜோதிட ஆலோசகராக ரத்தன் பண்டிட் செயலாற்றுவது இது முதல் முறை அல்ல. இவர் ஏற்கனவே தமிழக அரசியலில் இருந்த முக்கிய புள்ளிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர். இதில் முக்கியமாக, தமிழகத்தின் பலமுறை முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவும் ரத்தன் பண்டிட்டின் வழிகாட்டுதலையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல முக்கிய நடிகர்களும் அரசியல்வாதிகளும் இவரது வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்த விஜய்... எதிரிகளை வெல்லும் சூட்சமம்!

தவெக தலைவர் விஜய் பற்றி ரத்தன் பண்டிட்டின் கணிப்பு
(TVK Vijay TN ELection Results 2026 Rathan Pandit Prediction)
விஜய்யின் ஜாதகம் மிகச் சிறப்பானது என விவரித்த, ராதன் பண்டிட், தேர்தல் முடிவுகளில் அவருக்கு ஒரு சுனாமி வெற்றி கிடைக்கும் என்று கணித்தார். தனது வலுவான வாக்கு சதவீதத்தின் மூலம் விஜய் அரசியல் ரீதியாக பெரிய முக்கியத்துவம் பெற்று முதலமைச்சர் பதவிக்கு உயர்வார் என்றும் கணித்தார். மேலும், இவரது ஜாதகம் எதிரிகளை வெல்லும் என்றும் கணித்திருந்தார். ரத்தன் பண்டிட்டின் கூற்றுப்படி, சாதகமான கிரக அமைப்புகள் விஜய்யை அவரது அனைத்து போட்டியாளர்களை விடவும் வலிமையானவராகவும் தனித்துவமானவராகவும் ஆக்குகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்மாறாக வெளியானபோதும், இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். விஜய்யின் கட்சி 140 முதல் 170 இடங்களுக்கு மேல் வென்று, ஏறக்குறைய 45% வாக்குப் பங்கைப் பெற்று, மாபெரும் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். மேலும், வாக்கு எண்ணிக்கையின் 109-வது மணி நேரத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் கணித்தார்.

நடிகர் விஜய் மட்டுமில்லாமல், நடிகர் அஜித் அவர்களின் ஜாதகமும் முதலைமைச்சர் ஆகும் ஜாதகம் என்று கூறியிருக்கிறார்.

இருப்பினும், அவரது கணிப்புகள் குறித்த கருத்துக்கள் வேறுபடுகின்றன. சிலர் அவற்றை துல்லியமானவை எனக் கருதுகின்றனர், சிலர் இது வெறும் யூகம், என்று நிராகரிக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi