Dailyhunt
Rohini Star Boy Baby Names: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர்களை வைக்கலாம்?

Rohini Star Boy Baby Names: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர்களை வைக்கலாம்?

Tamil Baby Names for Boy Child Rohini Star: ஜோதிட சாஸ்திரத்தின்படி, 27 நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமான மற்றும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்று ரோகிணி.

சந்திரன் தனது 27 மனைவிகளில் (நட்சத்திரங்களில்) அதிக அன்பு செலுத்தும் நட்சத்திரமாக ரோகிணி கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள் வசீகரமான தோற்றமும், கலைகளில் ஆர்வமும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ரோகிணி நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு என்னென்ன பெயர்களை வைக்கலாம், என்னென்ன எழுத்துகளில் பெயர்களை வைக்கலாம் என்று பார்க்கலாம்.

ரோகிணி நட்சத்திரத்தின் சிறப்புகள்

  • அதிபதி: சந்திரன்
  • ராசி: ரிஷபம்
  • தேவதை: பிரம்மா
  • வடிவம்: தேர் அல்லது வண்டி
  • தன்மை: நிலையானது (Fixed)

ரோகிணி நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பெயர்கள் என்னென்ன எழுத்துக்களில் வைக்கலாம் - Rohini Star Boy Baby Namesரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், நட்சத்திர பாதத்தைப் பொறுத்து பெயரின் முதல் எழுத்தைத் தேர்வு செய்வது மரபு.

  • முதல் பாதம்: 'ஒ' (O)
  • இரண்டாம் பாதம்: 'வ' (Va)
  • மூன்றாம் பாதம்: 'வி' (Vi)
  • நான்காம் பாதம்: 'வு' அல்லது 'வூ' (Vu/Voo)


ரோகிணி ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் - Tamil Baby Names for Boy Child Rohini Star
. 'ஒ' (O) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் - முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பெயர்கள் பொருத்தமானவை:
ஒளிமாறன்: ஒளி வீசும் அரசன் போன்றவன்.
ஒப்பில்மணி: நிகரற்ற மாணிக்கம் போன்றவன்.
ஒளிர்வேல்: பிரகாசிக்கும் வேல் ஏந்தியவன்.
ஒளிவண்ணன்: ஒளியின் நிறம் கொண்டவன்.
ஒளிமணி: பிரகாசமான ரத்தினம்.

'வ' (Va) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்
இரண்டாம் பாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பெயர்கள் ஏற்றவை:
வர்ஷன்: மழையைக் குறிக்கும் பெயர், குளிர்ச்சியானவன்.
வருண்: நீர் நிலைகளின் கடவுள் / மழை
வடிவேல்: கூர்மையான அறிவையும் வெற்றியையும் குறிக்கும் முருகனின் ஆயுதம்.
வசந்த்: வசந்த காலத்தைப் போன்ற இனிமையானவன்.
வரதன்: மற்றவர்களுக்கு நன்மை (வரம்) தருபவன்.

அதிர்ஷ்டம் தரும் பெயர்கள் - குழந்தைகளுக்கு என்னென்ன பெயர்களை வைக்கலாம்?

'வா' (Vaa) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்
வாசுதேவன்: ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர் (கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது).
வாமன்: மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று.
வான்முகிலன்: ஆகாயத்து மேகம் போன்றவன்.
வாரிஷ்: செல்வந்தன் அல்லது கடல் போன்ற விரிந்த மனம் கொண்டவன்.
வாசு: ஒளிர்பவன் அல்லது வசுதேவரின் மைந்தன்.

'வி' (Vi) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் - மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பெயர்கள் சிறப்பாக இருக்கும்:
விஷ்ணு: உலகைக் காக்கும் கடவுள்.
விக்னேஷ் - முதன்மையானவன், விநாயகர் பெயர்
விக்ரம்: வீரம் அல்லது வெற்றி கொண்டவன்.
விமல்: களங்கம் இல்லாத தூய்மையானவன்.
வினய்: அடக்கமானவன் மற்றும் பண்புள்ளவன்.
விஜய்: வெற்றியாளன்.
விஸ்வா: உலகத்தை ஆள்பவன் அல்லது பிரபஞ்சத்தை குறிக்கும் பெயர்.
விவேக்: பகுத்தறிவு மற்றும் ஞானம் மிக்கவன்.
வித்யுத்: மின்னலைப் போல சுறுசுறுப்பானவன்.

கிருஷ்ணரின் பெயர்கள்
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணரைக் குறிக்கும் பெயர்களான முரளி, கிரிதரன், நந்தகோபால், கோவிந்தன் போன்ற பெயர்களை வைப்பதும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi