Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ.63,000 மதிப்புள்ள சைக்கிள் வைத்துள்ள, விஜய்க்கு அடுத்த தவெகவின் 2வது பெரிய கோடீஸ்வர வேட்பாளர் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு?

ரூ.63,000 மதிப்புள்ள சைக்கிள் வைத்துள்ள, விஜய்க்கு அடுத்த தவெகவின் 2வது பெரிய கோடீஸ்வர வேட்பாளர் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு?

முதல் முறையாக தேர்தல் களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அடுத்ததாக அக்கட்சியில் அதிக சொத்து மதிப்பு உள்ள வேட்பாளர் யார்?

அவரது சொத்து மதிப்பு எவ்வளவு ? என்பது உள்ளிட்ட தகவல்களை தற்போது அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனால் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதற்கிடையே வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ளபடி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை டூ பெங்களுரு மின்னல் வேக ரயில் பயணத்துக்காக 2 புதிய திட்டங்கள்..

விஜயின் சொத்துகள்

அந்த வகையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் களம் இறங்கும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜயின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 600 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அது போக அவரிடம் கொடைக்கானலில் 2 எஸ்டேட்டுகள், பிஎம்டபிள்யூ 530, டொயோட்டா லெக்சஸ், டொயோட்டா வெல் ஃபயர், பிஎம்டபிள்யூ ஜி7 உட்பட 5 சொகுசு கார்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக விஜய் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து தவெகவில் 2வது பெரிய கோடீஸ்வர வேட்பாளராக இருப்பவர் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா.

பெங்களுருவை விட்டு போறேன், இனி வரமாட்டேன் : ஆட்டோ ஓட்டுனரால் வெளிமாநில இளைஞருக்கு சாலையில் நடந்த பயங்கரம்..!

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

வருமானம்

அந்த வகையில் 2024 -25 நிதியாண்டில் அவரது வருமானம் ரூ.11.10 கோடி எனவும், 2020 - 21 நிதியாண்டில் அவரது வருவாய் ரூ.5.89 கோடி ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆதவின் மொத்த வருமானம் ரூ.67.37 கோடியாகவும், அவரது மனைவி டெய்சியின் வருமானம் அதே காலகட்டத்தில் 38 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையும் - அசையாத சொத்துக்கள்

இதுபோக ரூ.180 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் ஆதவ் அர்ஜுனாவின் பெயரிலும், ரூ.162 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் அவரின் மனைவி டெய்சி பெயரிலும் உள்ளன. இதேபோல 17.49 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாத சொத்துக்கள் ஆதவ் அர்ஜுனாவின் பெயரிலும், அவரின் மனைவி டெய்சி பெயரில் 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருக்கின்றன.

ஐஸ்கிரீம் சாப்பிட, விற்க தடை.. மீறினால் ரூ.5,000 வரை அபராதம்.. ஆந்திர கிராமத்தில் விநோதம்

மேலும் ஆதவ் அர்ஜுனாவிடம் 1.69 கோடி ரூபாய் ரொக்கம், அவரின் மனைவியிடம் 12 லட்சம் ரூபாய் ரொக்கம் கையிருப்பாக இருப்பதாகவும், வங்கி மற்றும் முதலீட்டு பத்திரங்களின் மூலம் ரூ.17.53 கோடி, ரூ.2.23 கோடி பங்குச்சந்தையில் முதலீட்டாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.63,000 மதிப்புள்ள சைக்கிள்..

ஆதவ் அர்ஜுனாவின் பெயரில் சென்னை உத்தண்டி மற்றும் போட்கிளப் பகுதிகளில் ரூ.17.49 கோடி மதிப்பிலான 2 அடுக்குமாடி குடியிருப்புகளும், ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள 2 கார்களும், 1.12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளும், 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஆதவ் அர்ஜுனாவிற்கு 155 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு 69.41 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது.. அசையும், அசையா சொத்துக்கள் என்னென்ன? முழு விவரம்

57 ஏக்கர் நிலங்கள்..

மகாபலிபுரம், செங்கல்பட்டு, கோவை மற்றும் கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் 37.45 கோடி ரூபாய் மதிப்பிலான 57 ஏக்கர் நிலங்கள் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பெயரில் இருப்பதாகவும், சென்னை மற்றும் கோவையில் 33.27 கோடி ரூபாய் மதிப்பில் 5 வணிக கட்டிடங்களும், ஆதவ் அர்ஜூனாவிடம் 2.29 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.6 கிலோ தங்க நகைகள், அவரின் மனைவியிடம் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.2 கிலோ தங்க நகைகளும், 60.27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளி பொருட்களும், 6.16 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும் இருப்பதாகவும் 1.88 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரித்துறையில் நிலுவை வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு கடன்

மொத்தத்தில் ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு ரூ.197.5 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், விஜய் சேதுபதிக்கு ரூ.25 லட்சம் கடன் கொடுத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது நடிகர் விஜய் சேதுபதி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்க்கு அடுத்தபடியாக தவெகவின் 2வது பணக்கார வேட்பாளராக திகழும் ஆதவ் அர்ஜூனா, பிரபல லாட்டரி கிங் மார்டினின் மருமகன் என்பது கவனிக்கத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi