தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர்
காவல்துறை பணியில் இருந்து ஊடகவியலாலராக மாறியவர் சவுக்கு சங்கர்.
'சவுக்கு ஊடகம்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த இவர் யூடியூபிலும், தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் தமிழக அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் பற்றி வெளிப்படையாக பேசி வந்தார். இதனால் ஒரு சில முறை கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார், அவர் மீது குண்டர் சட்டப்பிரிவு உட்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
2010ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திரட்டி எழுதிய ஒரு வலைப்பதிவிற்காக முதல் முறையாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது வலைப்பதிவை 'சவுக்கு' இணையதளமாக மாற்றி தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி வந்தார். 2023ஆம் ஆண்டு சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். இவரின் பேச்சுக்கள் ஆளும் தரப்பினரை கொதிக்கச் செய்வதாக அமைந்தன.
குண்டர் சட்டம்
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
பெங்களுரு சில்க்போர்டில் 2 மெட்ரோ ரயில் வழித்தடங்களை ஒன்றிணைக்கும் 250மீ ஆகாய நகரும் நடைபாலம்
பெண் காவலர்கள் பற்றி அவதூறாக யூடியூபில் பேசியதாக 2024 ஆம் ஆண்டு சவுக்கு சங்கரை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர். கஞ்சா பயன்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவானது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது பதியப்பட்டிருந்த 17 வழக்குகளிலும் மருத்துவ காரணங்களுக்காக நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சென்னை டூ பெங்களுரு மின்னல் வேக ரயில் பயணத்துக்காக 2 புதிய திட்டங்கள்..
காவல்துறைக்கு சவால்
இதனிடையே சவுக்கு சங்கர் தொடர்ந்து ஜாமின் நிபந்தனைகளை மீறி வருவதாக போலீசார் குற்றச்சாட்டை வந்தனர். அவரை கைது செய்வதற்காக போலீசார் தேடிவந்த நிலையில் 'நான் குஜராத்தில் பத்திரமாக இருப்பதாக கூறியதோடு முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்' என சவுக்கு சங்கர் காவல்துறைக்கு சவால் எடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆந்திராவில் கைது
இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரபல அரசியல் விமர்சகராக திகழும் சவுக்கு சங்கரை ஆந்திராவில் தேடிச் சென்று போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

