Dailyhunt
Siragadikka Aasai Cast: சிறகடிக்க ஆசை நடிகர், நடிகைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

Siragadikka Aasai Cast: சிறகடிக்க ஆசை நடிகர், நடிகைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

Siragadikka Aasai Cast : சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணியாக நடிப்பவர் சல்மா அருண். இவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

பின்பு ஜீ தமிழில் ஒளிப்பரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்தார். அதன் பின்பு தான் சிறகடிக்க ஆசை தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ரோகிணி கதாபாத்திரம் சல்மாவை பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆகியுள்ளது. சல்மா ஏற்கெனவே திருமணம் ஆனவர். அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவரின் சப்போர்ட்டில் தான் தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சல்மா சல்மாவுக்கு ரியல் லைஃபிலும் 10 வயதில் மகன் இருக்கிறார். குழந்தை பிறந்த பின்பு தான் சல்மாவுக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாம் . சல்மாவின் நிஜப்பெயர் சல்மா பர்வின். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. 31 வயதாகும் சல்மாவுக்கு இப்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். விளம்பரங்கள் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

மனோஜ் : சிறகடிக்க ஆசை தொடரில் விஜயாவின் செல்ல மகன் மனோஜ் ரோலில் நடிப்பவர் நடிகர் ஸ்ரீதேவா. இவர் முதன் முதலாக சின்னத்திரையில் விஜேவாக தனது கெரியரை தொடங்கினார்.அதன் பின்பு சீரியல் வாய்ப்பு தேடி ஆடிஷன் செல்ல தொடங்கினார். இதற்கிடையில் இன்ஸ்டாவில் ஏகப்பட்ட போட்டோஷூட் படங்களை வெளியிட்டார். அப்போது அவருக்கு ஷார்ட் ஃபிலிம்களில் நடிக்க வாய்ப்பு வர தொடங்கியது.ஷார்ட் ஃபில்ம்கள் மூலம் தனது நடிப்பு திறமையை மெருகேற்றி கொண்டார். பின்பு அவருக்கு சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது சீரியலில் மனோஜாகவே வாழ்கிறார் ஸ்ரீதேவா. அவரின் காமெடி கலந்த வில்லத்தனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையிலும் ஆலன், அதர்ம கதைகள் போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் மனோஜ் நடித்துள்ளார்.அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சீனில் ஸ்ரீதேவா நடித்து இருப்பார்.ஹீரோ மெட்டீரியல் லுக்கில் இருக்கும் ஸ்ரீதேவாவுக்கு வெள்ளித்திரை நல்ல எதிர்காலம் இருக்கிறது என அவரின் ரசிகர்கள் ஊக்கமளித்து வருகின்றனர்.


Siragadikka Aasai Cast And Crew: சிறகடிக்க ஆசை சீரியல்

ஸ்ருதி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் ஸ்ருதி எனும் கதாபாத்திரத்தில் அசத்தி வருபவர் ப்ரீத்தா ரெட்டி.சீரியலில் பணக்கார வீட்டு பெண்ணாக நடித்து வரும் ப்ரீத்தா ரெட்டி, நிஜ வாழ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.பெற்றோர்களுடன் இணைந்து விவசாயம் பார்த்து வந்த ப்ரீத்தா ரெட்டிக்கு, சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.கல்லூரி படிப்பை முடித்த கையோடு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பெற்றோருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஃபார்ட் டைமில் வேலை பார்த்து கல்லூரி ஃபீஸை கட்டியுள்ளார்.னிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் வந்த இவருக்கு முதலில் விஜய் டிவியின் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடரில் ஹீரோவின் சகோதரியாக நடித்தார். ஆனால் அவருக்கு சிறகடிக்க ஆசை தொடர் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது தான் உண்மை.

பக்கா சென்னை பொண்ணு.... ஆங்கர் டூ சீரியல் ஹீரோயின்... அழகே அழகு மதியை கொண்டாடும் ரசிகர்கள்!

விஜயா: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா ரோலில் நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார் கேரளாவை சேர்ந்தவர். 5 வயதில் நடனத்தின் மூலம் தனது கெரியரை தொடங்கினார்.மலையாள பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சின்ன தம்பி சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.சிறகடிக்க ஆசை சீரியலில் மூத்த மகன் முத்துவை வெறுக்கும் அம்மாவாக, மருமகள் மீனாவை டார்ச்சர் செய்யும் மாமியாராக தனது நடிப்பில் கலக்கி வருகிறார் அனிலா ஸ்ரீகுமார். தமிழில் விஜயா ரோலுக்கு கிடைத்த வரவேற்பை போலவே கன்னடத்தில் பிரபாவதி ரோலுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீரியலில் பான் இந்தியா நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை அனிலா ஸ்ரீகுமார். இவர் கேரளாவில் ஒரு புகழ்பெற்ற நாட்டியப் பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்இவருடைய கணவர் ஸ்ரீகுமாரும் திரைத்துறையை சேர்ந்தவர் தான். சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராகவும் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.. நிஜத்தில் அனிலாவுக்கு அபினவ் என்ற மகனும் ஆதிலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi