Dailyhunt
tamil nadu election result live:  தேர்தல் ரேஸில் முந்தும் தவெக.. சென்னையில்  14 தொகுதிகளில் முன்னிலை

tamil nadu election result live: தேர்தல் ரேஸில் முந்தும் தவெக.. சென்னையில் 14 தொகுதிகளில் முன்னிலை

Tamil nadu election result live: தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள 234 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது முடிந்தது.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக (DMK), எதிர்க்கட்சியான அதிமுக (ADMK), தவெக (TVK), நாம் தமிழர் கட்சி (NTK)களுக்கு இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் 5,73,43,291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 4,87,99,885 பேர் மட்டும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்ர். 5,80,384 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.இதற்காக தமிழகம் முழுவதும் 62 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, பெரம்பூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார். போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை.விருதுநகர் முதல் சுற்றில் தேமுதிக முன்னிலை.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ வேலு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.அதே போல கோவை வடக்கில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எல்.முருகன் பின்னடைவு..நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் பின்னடைவு. தர்மபுரி முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் பின்னடைவு. ராயபுரம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு


முன்னிலை நிலவரம்

  • தமிழக வெற்றிக்கழகம் 89 தொகுதிகளில் முன்னிலை
  • அதிமுக கூட்டணி 65 தொகுதிகளில் முன்னிலை
  • திமுக கூட்டணி 49 தொகுதிகளில் முன்னிலை

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi