Simmam | Tamil Newyear Rasipalan 2026: Tamil Puthandu Rasipalan 2026: சிம்மம் ராசிக்கார்களுக்கு பரபாவ வருடம், ராசிக்கு ஏழாம் வீட்டில் பிறக்கிறது.
இது எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும், அதற்கான தீர்வும் கிடைக்கும் என்பதை உணர்த்தும். இந்த ஆண்டு தொடக்கத்தில் சுமாராக, சாதாரணமாக இருந்தாலும், நவம்பர் மாதத்தில் இருந்து தடைகள் விலகி, முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம சனி, ராசியில் கேது என்று சில நெருக்கடிகள் மற்றும் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும், முயற்சிகளுக்கு பெரிய பலன்களைப் பெறுவீர்கள். சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2026 தமிழ் புத்தாண்டு விரிவான ராசிபலன் இங்கே.
சிம்மம் ராசிக்கு தமிழ் புத்தாண்டு 2026 பொதுப்பலன் - Simmam Tamil Puthandu 2026 General Horoscope
பராபவ ஆண்டு சிம்ம ராசியினருக்கு தடைகள், தாமதங்கள் இருந்தாலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் ஆண்டாக அமையும். தனிப்பட்ட விதத்தில் சிக்கல்கள், மன உளைச்சல், முயற்சிக்கு பலன் கிடைக்காத நிலை, என்று இருந்தாலுமே, எதிர்பாராத வளர்ச்சி, மகிழ்ச்சி, இணக்கமான சூழல் அமைந்து வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். ஆனாலும், அஷ்டம சனி நடப்பதால் எதிலும் நிதானம் தேவைப்படும். இருந்தாலும், குரு பார்வையால் பணப்புழக்கத்திற்குப் பஞ்சம் ஏற்படாது. சிந்தித்து செயல்படுவதால், எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். தடைகள் விலகி சுப காரியங்கள் கைகூடும்.
சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு 2026 பலன்: பண வரவு, பொருளாதாரம் - Simmam Tamil Puthandu 2026 Money, Finance Horoscope
பண வரவே இல்லை, வரவுக்கும் மீறி கட்டுக்கடங்காத செலவு என்ற நிலை மாறி, திருப்தியாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு பணவரவு இருக்கும். கடன்களை அடைக்கும் சூழல் ஏற்படும், அந்த அளவுக்கு வருமானம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும் போது, கடன்களில் ஒரு பகுதியை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பதோடு, வீட்டுக்கான பொருட்கள் மற்றும் புதிய அழகு சாதனப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீண் கௌரவத்திற்காகச் செலவு செய்வதைத் தவிர்க்கவும். பழைய சம்பள பாக்கிகள் வசூலாகும். இருந்தாலும், அஷ்டம சனி தொடர்வதால் பொருளாதார விஷயங்களில் கவனமாகவே இருக்க வேண்டும்.
விருச்சிக ராசிக்கு பராபவ ஆண்டு எப்படி இருக்கும்
சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு 2026 பலன்: திருமணம், குடும்பம், குழந்தை - Simmam Tamil Puthandu 2026 Family, Marriage, Love Horoscopeகும்ப ராசிக்கு, குடும்பம், திருமண வாழ்க்கை ஆகியவை, கடந்த ஆண்டுகளை விட சிறப்பாக இருக்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் தேடி வருவார்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போகும் குணம் அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், காதல் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பராபவ வருடத்தில் ஏதோ ஒரு வகையில் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து லாபம் ஈட்டுவார்கள். திருமணத் தடைகள் நீங்கும்.
சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு 2026 பலன்: வேலை, வியாபாரம், தொழில் - Simmam Tamil Puthandu Career, Job, Business Horoscope
பராபவ வருடம் சிம்ம ராசிக்கு, மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அலுவலகச் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, கடினப் போராட்டத்திற்குப் பிறகு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். அவசரப்பட்டு வேலை மாற வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மருந்து, கமிஷன் மற்றும் மர வகைத் தொழில்களில் நல்ல ஆதாயம் உண்டு. புதிய நிறுவனங்களுடன் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் திடீர் வாய்ப்புகளும் கிடைக்கும்.
சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு 2026 பலன்: கவனமாக இருக்க வேண்டியவை - Parabava Varudam Rasipalan
- ராசியில் கேது இருப்பதால், பற்றில்லாமல் இருக்கும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் தாமதமாகும்.
- அஷ்டம சனியால் ஏதோ ஒரு வகையில் நஷ்டம் ஏற்படும்.
- குருவால் வருமானம் அதிகரித்தாலும் விரயமும் ஏற்படும் என்பதால் அதை சுபச் செலவாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கவும்.
- வருங்காலத்தைப் பற்றிய இனம் புரியாத பயம் வந்து போகும்.
- உத்தியோகம் மற்றும் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும், ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு இன்னல்களைக் குறைக்கும்.
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | சிம்மம் | மீனம்
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

