Tamil Thai Valthu Lyrics: தமிழ் தாய் வாழ்த்துநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த..." பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார். 1891-ஆம் ஆண்டு எழுதிய 'மனோன்மணீயம்' என்ற புகழ்பெற்ற நாடக நூலின் தொடக்கத்தில் இடம்பெற்ற "தமிழ்த் தெய்வ வணக்கம்" என்ற பாடலின் சுருக்கமான பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. பாடலை எழுதிய சுந்தரனார், 1897 ஏப்ரல் 26 அன்று தன்னுடைய 42வது வயதிலேயே மறைந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல் மறையாத புகழுடன் திகழ்கிறது.
ல்லரிக்க வைக்கும் இந்தியாவின் தேசிய பாடல் வந்தே மாதரம் பாடல் லிரிக்ஸ்!
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "நீராரும் கடலுடுத்த" என்கிற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைத்து பள்ளி கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது

