Dailyhunt
Tamilnadu Weather Updates:  11 மாவட்டத்தில் இடி மின்னலுடன் இன்று வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை

Tamilnadu Weather Updates: 11 மாவட்டத்தில் இடி மின்னலுடன் இன்று வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை

Tamilnadu Weather Updates: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் கருமேகம் சூழ்ந்தது. சுமார் 1 மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. கல்லக்குடி, புள்ளம்பாடி, லால்குடி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 69 மி.மீ மழை பதிவானது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுமார் 1.5 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.சுமார் 0.9 கிமீ உயரத்தில் வட உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

: "தோல்வியும் புதிதல்ல.. துரோகமும் புதிது அல்ல.. காலம் பதில்சொல்லும்.." - காங்கிரஸை விமர்சித்த டி.ஆர்.பாலு

08-05-2026 முதல் 11-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

12-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

: "அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான்" -ஜோதிமணி எம்.பி

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi