உலகம் முழுவதிலும், ஆங்கிலக் கேலண்டரின் படி, ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
அதே போல, தமிழ்நாட்டில் மற்றும் தமிழ் சமூகங்கள் வசிக்கும் இடங்களில், சித்திரை மாதப் பிறப்பு, சித்திரையின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும். ஆங்கிலக் காலண்டரைப் பின்பற்றினால் கூட, அவரவர் தாய்மொழி, சமூகம், வசிக்கும் இடம், பாரம்பரியம் மற்றும் ஜோதிட ரீதியாக, கிரகங்களின் பெயர்ச்சியின் அடிப்படையில், வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் புத்தாண்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14ஆம் தேதி சித்திரை திருநாள் என்ற தமிழ் வருடப்பிறப்பு அதாவது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும். 2026 தமிழ் புத்தாண்டு எந்த தேதியில் வருகிறது, மற்றும் இதன் சிறப்புகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
2026 தமிழ் புத்தாண்டு தேதி
2026 தமிழ் புத்தாண்டு அதாவது தமிழ் வருட பிறப்பு ஏப்ரல் 14, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
சித்திரைத் திருநாள், தமிழ் வருட பிறப்பு, என்று பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு நாளில் தான் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு மொழிகள் பேசுபவர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
சூரியன் பெயர்ச்சியின் அடிப்படையில் தமிழ் புத்தாண்டும், பிற மாநிலங்களில் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது.
கிரிவலம் செல்ல இலவச ஏசி பேருந்து சேவை - திருவண்ணாமலையில் புதிய பேருந்து சேவை
- கேரள மக்களின், மலையாள வருட பிறப்பு என்று அறியப்படும் கேரளாவின் புத்தாண்டான விஷு பண்டிகையும், ஏப்ரல் 14 அன்று தான் கொண்டாடப்படுகிறது.
- மேற்கு வங்கத்தில் பைசாகி, பஞ்சாம் மாநிலத்தில் வைசாகி, அசாமில் பிஹு
- ஒரிசா மாநிலத்தில் பன்னா சங்கராந்தி என்று வெவ்வேறு பெயர்களில் தமிழ் புத்தாண்டு 2026 கொண்டாடப்படும்.
2026 தமிழ் புத்தாண்டின் சிறப்புகள் மற்றும் கொண்டாடும் முறைகள்
தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. நடப்பு ஆண்டின் பெயர் விசுவாவசு என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தமிழ் புத்தாண்டின் பெயர் பராபவ என்று அழைக்கப்படுகிறது. 60 ஆண்டுகளில் இந்த ஆண்டு 40வது ஆண்டாகும்.
தமிழ் புத்தாண்டு 2026 அன்று என்ன செய்ய வேண்டும்?
பாரம்பரிய முறைப்படி தமிழ் வருட பிறப்பன்று, பொங்கல் பண்டிகைக்கு போல வீட்டை சுத்தம் செய்து, அலங்காரம் செய்வது போல செய்ய வேண்டும்.
- ஒரு சில சமூகங்களில், குடும்பத்தின் பழக்கங்களில் தமிழ் புத்தாண்டு அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படைக்கும் வழக்கமும், பூஜை, அபிஷேகம் செய்யும் வழக்கமும் இருக்கின்றது.
- கோடை வெயில் அதிகரிப்பதை ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் குறிப்பிடுவதால், தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவை உணவுகளோடு, அறுசுவை பச்சடி, நீர் மோர் மற்றும் பானகம் ஆகியவை செய்து பூஜையில் வைத்து அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும்.
- புதிய பஞ்சாங்கம் வாங்கி பூஜையில் வைத்து இனிப்புகள் வைத்து, கற்பூரம் காட்டி அனைவரும் வணங்கிய பின்பு பஞ்சாங்கம் படிப்பது என்பது பாரம்பரிய பழக்கமாக இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
- வீட்டில் சுப காரியம் நடத்துவதற்கு, சுபகாரிய பேச்சை துவங்குவதற்கு பஞ்சாங்கத்தில் நல்ல நாள் மற்றும் நேரம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கமாகும்.
ஜாதக கட்டத்தில் உள்ள 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் சித்திரை மாத பிறப்பையும், தமிழ் வருட பிறப்பையும் குறிக்கும். ஏப்ரல் 14 2026 அன்று சூரியன், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

