Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TASMAC Holiday: மதுப் பிரியர்களே.. டாஸ்மாக் கடைகளுக்கு இந்த 4 நாள்கள் விடுமுறை.. தேர்தல் ஆணையம் உத்தரவு

TASMAC Holiday: மதுப் பிரியர்களே.. டாஸ்மாக் கடைகளுக்கு இந்த 4 நாள்கள் விடுமுறை.. தேர்தல் ஆணையம் உத்தரவு

மிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தில் மதுபான விற்பனையை அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாள்களை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாள்களில் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகம் உள்ளன.

டாஸ்மாக் விடுமுறை நாள்கள்
அதேவேளை, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாள்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். மேலும், உள்ளூர் வட்டார சார்ந்த முக்கிய நிகழ்வுகளின் போது சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவது வழக்கம்.

அந்த வகையில் வரும் மார்ச் 31ம் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும். இதற்கிடையே தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மது விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள்
அதன்படி, இந்த தேர்தல் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரசீதில், 4.50 லிட்டர் இந்தியாவில் உற்பத்தியாகும் மது வகைகள், 7.80 லிட்டர் பீர், 4.50 லிட்டர் வெளிநாட்டு மது வகைகள், 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றுக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்தால் ஒரு ரசீதில் 25 குவாட்டர் அல்லது 12 ஆஃப் அல்லது 6 புல் பாட்டில் மதுவகைகள் மற்றும் 12 பீர் பாட்டில்கள் தான் வழங்கமுடியும் என்ற கட்டுப்பாடானது பின்பற்றப்படுகிறது.

மேலும், தேர்தல் தொடர்பான முக்கியமான 4 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் இருந்து மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறை.

: சேலம், கோவை வழியாக கேரளா செல்லும் முக்கிய ரயில் சேவை 2 மாதங்கள் ரத்து.. முழு விவரம் இங்கே

அதன்படி, ஏப்ரல் 21ம் தேதி அன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க சாத்தியம் உள்ளது. அதேபோல, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 4ம் தேதி (திங்கள் கிழமை) அன்று வெளியாகிறது.

வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். எனவே, ஏப்ரல் 21, 22, 23 மற்றும் மார்ச் 4ம் தேதி என மொத்தம் 4 நாள்கள் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இடையே மே 1ம் தேதி தொழிலாளர் தினம் அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi