Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Tiruchendur Temple: திருச்செந்தூர் கோவில் ஆய்வு விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணன் - அமைச்சர் ரமேஷ் இடையே கடும் வார்த்தை போர்!

Tiruchendur Temple: திருச்செந்தூர் கோவில் ஆய்வு விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணன் - அமைச்சர் ரமேஷ் இடையே கடும் வார்த்தை போர்!

றுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் (Tiruchendur Temple), இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்றைய தினம் (மே 29) மேற்கொண்ட ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை அடுத்து கோவில் பாதுகாவலர்கள், முடி இறக்கும் தொழிலாளர்கள், கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்ப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவுவான அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் ரமேஷை கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார். அதற்கு அமைச்சர் ரமேஷ் (Minister Ramesh) உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியதாவது, "புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாக திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடியேந்தி, பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்திற்குறியதாகும். பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோவிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

பல வெளி ஊர்களிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர். அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர்.

: திருவண்ணாமலை டூ தேனி.. 16 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

இந்தநிலையில் அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீக பணியை இழிவுபடுத்தியுள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். அறநிலையத் துறை அமைச்சரின் இந்த செயல் அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு 7-வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்துவரும் நிலையில் அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்." என்றுள்ளார்.

அமைச்சர் ரமேஷ் பதிலடி

இதற்கு அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிலடி பதிவில் கூறியதாவது, "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை. நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.

: வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல.. திருச்சி கிழக்கு செல்லும் முதல்வர் விஜய்!
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!" என்றுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi