Dailyhunt
Tvk Rajmohan: சின்னத்திரை டூ தவெக.. விஜய்யால் எழும்பூர் தொகுதியில் களம் இறக்கப்பட்ட  ராஜ்மோகன் நிலை என்ன தெரியுமா?

Tvk Rajmohan: சின்னத்திரை டூ தவெக.. விஜய்யால் எழும்பூர் தொகுதியில் களம் இறக்கப்பட்ட ராஜ்மோகன் நிலை என்ன தெரியுமா?

Tvk Rajmohan: 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1 மணி நிலவரப்படி விஜய்யின் தவெக கட்சி 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் இதுவரை காணாத ஒரு புரட்சியை கண்டு கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்-க்கு பிறகு தவெக் தலைவர் விஜய் நடத்திருக்கும் மேஜிக், ஒட்டு மொத்த அரசியலையும் புரட்டி போட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை 2026 அரசியலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிய வைத்துள்ளது. வெள்ளித் திரையில் உச்ச நடிகராய் ஜொலித்து கொண்டிருக்கையில், அதை குட்பை சொல்லிவிட்டு மக்கள் நலன் சார்ந்த பொது வாழ்க்கையில் விஜய் இறங்கி, முதல் தேர்தலை சந்திருக்கிறார் விஜய். காலை முதல் சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர். 1 மணி நிலவரப்படி சில வாக்குகள் சுற்று எண்ணிக்கைக்கு பிறகு 2 தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.


Tvk Vijay: தவெக விஜய் கொடுத்த வாய்ப்பு

திமுக, அதிமுகவுடன் ஒப்பிடுகையில் தவெகவில் அந்த அளவுக்கு ஸ்டார் வேட்பாளர்கள் இல்லை எனலாம். மக்களுக்கு அதிகம் தெரியாத நிறைய புது முகங்கள் முதன் முறையாக தவெக சார்பில் தேர்தலில் கள்ம் கண்டுள்ள்னர். அந்த வகையில் சென்னையில் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படும் எழும்பூர் தொகுதியில் நடிகர், பேச்சாளர், சின்னத்திரை பிரபலம் என பலமுகங்களை கொண்ட ராஜ்மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெகவின் முக்கிய பேச்சாளர்களில் இருவரும் ஒருவர்.



ராஜ்மோகன் திமுக (DMK): தமிழன் பிரசன்னா, , அதிமுக (AIADMK): அபிஷேக் ரங்கசாமி, நாம் தமிழர் கட்சி (NTK): சரண்யா ஆகியோருக்கு எதிராக எழும்பூர் தொகுதியில் களம் கண்டார். இந்நிலையில் 1 மணி நிலவரப்படி ராஜ் மோகன் 28 ஆயிரம் 662 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் தமிழன் பிரச்சனாவை பின்னுக்கு தள்ளி இருந்தார். இந்நிலையில் எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக வேட்பாளர் தமிழன் பிரச்சனாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று இருக்கிறார்.

விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதி நிலவரம் என்ன? ஷாக்கில் தவெக

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi