2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து களமிறங்கியது.
இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை தமிழக வெற்றிக்கழகம் அறுவடை செய்துள்ளது. 2024, பிப்ரவரியில் கட்சியை தொடங்கிய விஜய் அடுத்த 2 ஆண்டுகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கி 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மையை எட்ட இன்னும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.திமுகவுடனான 20 ஆண்டுகால கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 5ல் வென்று, தற்போது தவெக அணிக்கு தாவியுள்ளது.

