Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK Vijay in Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்த விஜய்... எதிரிகளை வெல்லும்

TVK Vijay in Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்த விஜய்... எதிரிகளை வெல்லும்

Chathru Samhara Poojai in Tiruchendur: அறுபடை வீடுகளில் பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்ட படை வீடு தான் திருச்செந்தூர்.

முருகப்பெருமான் அவதரித்த நோக்கமான சூரசம்ஹாரம் நடந்த ஆன்மீக தலம் திருச்செந்தூர், வரங்களை தரும் அனுகிரக கோவிலாகவும், தீய சக்தியை, மற்றும் எதிரிகளை அழிக்கும் ஆலயமாகவும் உள்ளது. இந்நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன நடிகர் விஜய், திருச்செந்தூருக்கு வருகை தந்து அதிகாலையிலேயே சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சத்ரு சம்ஹார பூஜை என்றால் என்ன இந்த பூஜை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் இதை ஏன் செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சத்ரு சம்ஹார பூஜை - அர்த்தம்

  • சத்ரு சம்ஹார - சத்துரு என்றால் எதிரிகள் மற்றும் பகைவர்கள் என்பதை குறிக்கும்.
  • சம்ஹாரம் - அழிப்பது
  • முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார், அதாவது அசுரனை வதம் செய்தார்.


சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து மகா சக்தியாக இயற்கையாக அவதரித்த சுப்பிரமணியர், பெரும் சக்தி வாய்ந்த தேவமாக காலம் காலமாக வழிபடப்படுகிறார். அதேபோல சத்ரு சம்காரம் என்பது எதிரிகளையும் பகைவர்களையும், அழிப்பது மற்றும் நீக்குவது என்பதை குறிக்கும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், எதிரிகளை வெல்வதற்காக திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜை செய்தார்.

திருவண்ணாமலையில் நடந்த சம்பவம்... பக்தர்களை குழப்பிய திடீர் நம்பிக்கைகள்... உண்மை என்ன?

சத்ரு சம்ஹார பூஜை என்றால் என்ன - Chathru Samhara Poojai in Tiruchendur
சத்ரு சம்ஹார பூஜை என்பது நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகளை எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு, போட்டியில் உள்ள எதிரிகள் மற்றும் சூழ்ச்சியாளர்களை வெல்வதற்கு, அரசியல் ரீதியாக எதிரிகளை வெல்வதற்கு செய்யப்படும் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாகும். குறிப்பாக பெரிய தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் ஆகியோர் இந்த பூஜையை சமீபமாக அதிகமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்ரு சம்ஹார பூஜையை செய்தால், கண்டிப்பாக எதிரிகள் வீழ்ச்சி அடைவார்கள் என்பது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

TVK Vijay in Tiruchendur - அதிகாலையிலேயே சற்று சமகால பூஜைகள் கலந்து கொண்ட நடிகர் விஜய் பூஜை முடிந்த பிறகு மூலவர் சந்நிதியில் மனமுருகி வேண்டிக் கொண்டார். மூலவர் சன்னதி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் ஆலயத்தில் இருக்கும் அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் மூர்த்தியாக அருள்பாளிப்பதால், இந்த பூஜை செய்வது வெற்றி வாய்ப்பை உறுதியளிக்கும், எதிரிகளை வெல்லும் ஆற்றலைத் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விஜய் சத்ரு சம்ஹார பூஜை செய்துள்ளார். தற்பொழுது தவெக தலைவர் விஜய், இந்த பூஜையை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள்

அரசியல் உலகம், தொழில் போட்டி மற்றும் தொழில் ரீதியாக எதிரிகளை வெல்வது ஆகியவற்றுக்கு இந்த யாகத்தை செய்து, வெற்றி பெறுகிறார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. தொழில் நஷ்டம் நாள்பட்ட கடன் சிக்கல் ஆகியவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi