Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK Vijay:  விஜய்- எடப்பாடி பழனிச்சாமி இடையே சந்திப்பு நிகழவில்லை..  தவெக தரப்பு விளக்கம்

TVK Vijay: விஜய்- எடப்பாடி பழனிச்சாமி இடையே சந்திப்பு நிகழவில்லை.. தவெக தரப்பு விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து களமிறங்கியது.

இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை தமிழக வெற்றிக்கழகம் அறுவடை செய்துள்ளது. 2024, பிப்ரவரியில் கட்சியை தொடங்கிய விஜய் அடுத்த 2 ஆண்டுகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கி 108 இடங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மையை எட்ட இன்னும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. 2026 சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இபிஎஸ்- விஜய் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியிருந்தார்.

இந்திலையில் தவெக தலைவர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தவெக தரப்பு மறுத்துள்ளது. தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தை என தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 11 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி இடதுசாரிகள், விசிகவுக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் " தமிழக வெற்றிக்கழகத்திடம் இருந்து எங்களுக்கு கடிதம் வரவில்லை. மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையில் சிபிஎம் உறுதியாக உள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் தொடர்கிறோம்'' எனக் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi