Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK VS Babu: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய விஜயின் தவெக.. யார் இந்த வி.எஸ். பாபு?

TVK VS Babu: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய விஜயின் தவெக.. யார் இந்த வி.எஸ். பாபு?

மிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் ஆளும் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுகவை சேர்ந்த சிட்டிங் அமைச்சர்கள், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வி முகத்தில் உள்ளனர். இதில் எல்லவற்றிக்கும் மேலாக ஷாக் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியை தழுவியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வி.எஸ்.பாபு முன்னிலை பெற்று வெற்றிக் கனியை பறித்துள்ளார். கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை வி.எஸ்.பாபு வீழ்த்தியுள்ளார்.

சென்னையில் கொளத்தூர் தொகுதியானது 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இருந்து நடைபெற்ற 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை பெற்ற மு.க.ஸ்டாலின் இந்தமுறை புதிய கட்சியான தவெகவின் வேட்பாளரான விஎஸ் பாபுவிடம் தோல்வியை கண்டுள்ளார்.

யார் இந்த விஎஸ் பாபு

முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபு ஒரு முன்னாள் திமுக நிர்வாகி என்பது தான் ஹைலைட். இவர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் ஆவார். மேலும், சென்னை புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். குறிப்பாக மு.க. ஸ்டாலினின் முக்கிய விசுவாசிகளில் ஒருவராகவும் விஎஸ் பாபு இருந்து வந்தார்.

: மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி முகம்.. முதல்முறை ஆட்சி அமைக்க பிரகாச வாய்ப்பு!

இந்நிலையில், இவர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவர் 2011ம் ஆண்டில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவிலும் இவருக்கு சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்து. இந்த தேர்தலில் அதிமுக தலைமை இவரை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கும் என்ற பேச்சுக்களும் அடிபட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிமுக தலைமையில் அதிருப்தி எனக்கூறி விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். அவரை தவெக தலைமை கொளத்தூர் வேட்பாளராக விசில் சின்னத்தில் நிறுத்தியது. இவர் தற்போது மெக அப்செட் தரும் விதமாக முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாது துரைமுருகன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தாமோ அன்பரசன், கீதா ஜீவன் உள்ளிட்ட பல சிட்டிங் அமைச்சர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்துள்ளனர்.

தோல்வி அடைந்த முதலமைச்சர்கள்

1962 - 67ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. அண்ணாதுரை தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். விருதுநகரில் போட்டியிட்ட காமராசரும் தோல்வியை தழுவினார்.

: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை.. தமிழக அரசியலை மாற்றியமைத்த சினிமா நட்சத்திரங்கள்.. ஓர் அலசல்!

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. 234 தொகுதிகளில் அதிமுக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் 8,366 வாக்குகள் தோல்வியடைந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi