Saturday, 23 Jan, 12.10 pm TN Flash News

தற்போதைய செய்திகள்
மாஸ் வெல்கம் ட்ரீட் கொடுத்த நண்பர்கள் - செம குத்தாட்டம் போட்ட பாலாஜி (வீடியோ)

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பாலா என்கிற பாலாஜி முருகதாஸ்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது முதலே அடாவடியாக நடந்து வந்தார். எல்லோரிடமும் சண்டை போடுவார். அர்ச்சனா, சனம் ஷெட்டி, ஆரி ஆகியோரிடம் அடிக்கடி மோதலில் ஈடுபடுவார். பயங்கரமாக கத்துவார். ஆரி, ரியோ போன்றோர் கேள்வி கேட்டால் 'ஆமா அப்படித்தான்' என திமிறாக பதிலளிப்பார். ஆனாலும், அவர் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து வந்தார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என பலரும் கூறி வந்தனர். ஆனாலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.இறுதிப்போட்டியில் 2ம் இடத்தை பெற்ற அவர் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது நண்பர்களுடன் அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

The post மாஸ் வெல்கம் ட்ரீட் கொடுத்த நண்பர்கள் – செம குத்தாட்டம் போட்ட பாலாஜி (வீடியோ) appeared first on .

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: TN Flash News
Top