Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
1500 மதிப்புள்ள OTT ஆப்கள் வெறும் 200 ரூபாய்க்கு..!! புதிய 'Jio OTT Pass' அறிமுகம்..!!

1500 மதிப்புள்ள OTT ஆப்கள் வெறும் 200 ரூபாய்க்கு..!! புதிய 'Jio OTT Pass' அறிமுகம்..!!

Top Tamil News 4 months ago

இந்த திட்டத்தில் என்ன ஸ்பெஷல்?

JioHotstar, Prime Video, YouTube Premium, Sun NXT உள்ளிட்ட 15 Premium OTT தளங்கள் வேலிடிட்டி: 28 நாட்கள்

விலை: வெறும் ₹200 டேட்டா: 30 GB + Unlimited 5G மொபைலில் 1000+ Live TV சேனல்கள்

ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட்!

ஜியோ நிறுவனம் 'ஜியோ OTT பாஸ்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் 200 ரூபாய். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கில், மாதம் 1,500 ரூபாய் மதிப்புள்ள பலன்கள் கிடைப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு பேஸ் பிளான் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த OTT பாஸை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை மையமாக வைத்து, வீடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி மற்றும் அதிவேக டேட்டா என அனைத்தையும் ஒரே பேக்கில், மிகக்குறைந்த விலையில் இந்த பாஸ் வழங்குகிறது.

யூடியூப் ப்ரீமியம் : விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்கலாம். மொபைல், டிவி, டேப்லெட் என அனைத்திலும் பயன்படுத்தலாம். பேக்கிரவுண்டில் வீடியோ பார்ப்பது மற்றும் ஆஃப்லைனில் டவுன்லோட் செய்யும் வசதியும் உண்டு.

ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் ப்ளஸ் ஹாலிவுட் : லைவ் விளையாட்டுப் போட்டிகள், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் : அமேசான் பிரைம் வீடியோவை மொபைலில் பார்க்கலாம்.

ஜியோ டிவி வழியாக மேலும் 12 OTT ஆப்கள்: சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி+, சன் நெக்ஸ்ட், ஃபேன் கோடு, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, TimesPlay மற்றும் Tarang Plus.

1,000+ லைவ் டிவி சேனல்கள்:

ஜியோ டிவி ஆப் மூலம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் பார்க்கலாம். இதில் 150-க்கும் மேற்பட்ட பெய்டு சேனல்களும் அடங்கும். முக்கிய நெட்வொர்க்குகள்:

ஜியோ ஸ்டார் : ஸ்டார் ப்ளஸ் HD, கலர்ஸ் HD மற்றும் பிற பொழுதுபோக்கு, திரைப்பட சேனல்கள்.

சோனி : SET HD, Sony SAB HD மற்றும் பல.

சன் நெட்வொர்க் : சன் டிவி HD, கே டிவி HD மற்றும் பிற தமிழ் பொழுதுபோக்கு, திரைப்பட, இசை சேனல்கள்.

டிஸ்கவரி : டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானட் மற்றும் பிற அறிவு சார்ந்த, லைஃப்ஸ்டைல், வனவிலங்கு மற்றும் குழந்தைகளுக்கான சேனல்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News