Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
24 வயது இளம்பெண்ணை 3-வதாக திருமணம் செய்த சாமியார்; முதல் மனைவி பரபரப்பு புகார்..!!

24 வயது இளம்பெண்ணை 3-வதாக திருமணம் செய்த சாமியார்; முதல் மனைவி பரபரப்பு புகார்..!!

Top Tamil News 1 week ago

வடி அருகே பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த்குமார் (வயது 45) இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார்.

இவருக்கு 2008-ம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

சாந்தகுமார் கோவிலுக்கும் வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். இதனால் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2-வதாக வேறு ஒரு பெண்ணையும் சாந்தகுமார் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவர் முதல் மனைவி கவுசல்யா ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாந்தகுமார் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் என் கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளதுடன் தற்போது சென்னை கொளத்தூரை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை குறி சொல்லி மயக்கி 3-வதாக திருமணம் செய்துகொண்டார்.எனவே அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த புகார் மனு குறித்து ஆவடி மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News