தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக விளங்கும் வருவாய், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கடந்த மாதம் 4ஆம் தேதி முதற்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இந்த நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுகொள்வதற்காக இன்று காலை அவர், தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி முன்னிலையில் , மருத்துவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்தினர்.

