Dailyhunt
8வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி..!

8வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி..!

Top Tamil News 3 weeks ago

மிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சாத்தூரில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உடனிருந்தார். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல, எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை 8-வது முறையாக தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக, எடப்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சிவசங்கர், ரகுபதி மற்றும் அப்பாவு, கடற்கரை ராஜ், கருணாஸ் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News