Dailyhunt
"அந்த ஆடியோ ஒட்ட வெட்டப்படவில்லை, அது உங்கள் குரல் தான் என்பதை நிரூபிக்க நான் தயார்"- ஆ.ராசாவுக்கு மாரிதாஸ் சவால்

"அந்த ஆடியோ ஒட்ட வெட்டப்படவில்லை, அது உங்கள் குரல் தான் என்பதை நிரூபிக்க நான் தயார்"- ஆ.ராசாவுக்கு மாரிதாஸ் சவால்

Top Tamil News 1 week ago

திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ஆ.ராசா வழக்கறிஞர்.

இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தான் பேசியதாக சமூகவலைதளங்களில் ஆடியோ பரவும் நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக எம்பி ஆ.ராசா, நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறியிருந்தார்.



இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளத்தில், "ஆ ராசா அவர்களுக்கு , எப்போதும் "வா மேடைக்கு என அனைவரையும் சவால் விடும்" ஆ ராசா அவர்களே- இந்த விவகாரத்தில் நான் கூப்பிடுகிறேன் வாங்க ஒரே ஒரு மேடையை போடுங்க.. நீங்களும் நானும்... நீங்கள் சொன்னது போல ஒட்டி வெட்டி இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா? உங்கள் குரல் இல்லையா இல்லை உங்கள் AI குரலா? என்ற அனைத்தையும் மொத்த மீடியா வைத்துக் கொண்டு ஒரு மேடையில் பேசலாம். மக்களுக்கு யார் சொல்வது உண்மை என தெரியட்டும்.. உங்களுக்கு உதவிக்கு தேவை என்றால் யாரை வேண்டுமென்றாலும் அழைத்து வாருங்கள். நான் தனியாக வருகிறேன்.. அது ஒட்ட வெட்டப்படவில்லை அது உங்கள் குரல் தான் என்பதை நிரூபிக்க நான் தயார்.. என்ன நீங்கள் எப்படி? வரங்களா.. "ச்சீ! ச்சீ!! உபிஸ் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!"" எனக் குறிப்பிட்ட்ள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News