Dailyhunt
அரசியல் சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

அரசியல் சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

Top Tamil News 3 weeks ago

மிழக வெற்றி கழக இணை பொது செயலாளர். நிர்மல் குமார் உள்துறை அமைச்சருக்கும், உள்துறை செயலருக்கும் கடிதம் எழுதி இருந்தது குறித்து பேசிய விந்தியா அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய உள்துறை செயல் அஜய்குமார் பல்லா கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநர் ஆகிவிட்டார். தற்போது உள்துறை செயலராக கோவிந்த் மோகன் உள்ளார். அது கூட தெரியாமல் தவெகவினர் இருப்பது குறித்து விமர்சித்து இருந்தார்.

மேலும், அவர் பேசுகையில் அரசியலுக்கு வந்தவர்கள் இன்னும் பாதுகாப்பு கேட்டு யாருக்கு கடிதம் எழுதுகிறோம் என தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்புக்கு யாரை கேட்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. எப்படி இப்படிப்பட்டவர்கள் மக்கள் பாதுகாப்பு பற்றி பேசுவார்கள். மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள். எப்படி மக்களை பாதுகாப்பார்கள் என்ற வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார் முதலில் அவர்கள் அரசியலில் ஆ என்ற எழுத்தை கற்றுக்கொண்டு பிறகு அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா திறந்த வேனில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதி பெயரில் பூங்காக்கள் கட்டுவதற்கு பதிலாக கழிப்பறைகளை கட்டி இருந்தால் விளாத்திகுளம் மாணவி பலி ஆகி இருக்க மாட்டார் என தெரிவித்தார். ஆனால் இதெல்லாம் கட்ட முடியாது. ஸ்டாலின் கையில் 10000 ரூபாய் மட்டுமே உள்ளது என கணக்கு கொடுத்துள்ளதாகவும், ஸ்டாலின் பெயரில் ஒரு கார் கூட இல்லை, 1 கிராம் தங்கம் கூட கிடையாதாம் எனவும், இவர் ஏழை ஸ்டாலின் எனவும், ஆனால் அவரது பேரன் பல நூறு கோடி செலவு செய்து ரஜினி, கமல் ஆகியோரை வைத்து படம் தயாரிக்கிறார் எனவும், மக்களை மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தை கூட முட்டாள் என நினைக்கிறார்கள் என சாடினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News