Dailyhunt
"அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள்"- ஓபிஎஸ்

"அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள்"- ஓபிஎஸ்

Top Tamil News 3 weeks ago

டப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி யில் திமுக சார்பாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து திறந்த வெளி ஜீப்பில் ஊர்வலமாக வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையாவிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில், "தளபதி ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனூரில் இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். கடந்த காலங்களில் நான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்கள் வைத்த கோரிக்கைகளில் 100க்கு 99.9% நிறைவேற்றி உள்ளேன்.

அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள், பொதுக்குழுவில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசியது யாரென்று அனைவருக்கும் தெரியும். 50 ஆண்டுகால அரசியலில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 5 ஆண்டுகள் நகர்மன்ற தலைவர் என பொதுவாழ்வில் என்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளேன். என்மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை. மக்களின் ஆதரவு மற்றும் அபிமானத்துடன் தான் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும். இருக்க வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு வந்த வழி தவறு. சசிகலாவால் முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று கூறி நன்றி உணர்வு இல்லாத மனிதராக இருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News