Dailyhunt
பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த விஜய்! பிரச்சாரத்தில் பரபரப்பு

பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த விஜய்! பிரச்சாரத்தில் பரபரப்பு

Top Tamil News 3 weeks ago

புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், மணவெளி தொகுதி பாஜக வேட்பாளரும், சபாநாயகருமான செல்வத்திற்கு வாக்களிக்கும்படி பேசினார்.

புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரி வந்த விஜய்க்கு அவராவது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். புதுச்சேரி வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர் ஒருவர், வேல் பரிசாக கொடுத்தார். அதனை அவர் அன்பாக வாங்கி கொண்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், மணவெளி தொகுதி பாஜக வேட்பாளரும், சபாநாயகருமான செல்வத்திற்கு வாக்களிக்கும்படி பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த த.வெ.க மணவெளி தொகுதி வேட்பாளர் ராமு, விஜயிடம் தன் பெயர் ராமு எனவும், செல்வம் பாஜக வேட்பாளர் என விளக்கி கூறியதை அடுத்து, தவெக வேட்பாளர் ராமுவுக்கு வாக்களியுங்கள் என விஜய் மக்களிடம் கேட்டு கொண்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News