Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாகல் இலைச் சாற்றில் வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பாகல் இலைச் சாற்றில் வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

Top Tamil News 6 days ago

பொதுவாக பாகல் இலை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடியது ஆகும் .உதாரணமாக பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும்.

பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும்.
பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.மேலும் இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்
1.பாகற்காய் உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பாகற்காய் பசியைத் தூண்டும்.பாகற்காய் பித்தத்தை தணிக்கும். பாகற்காய் மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும்.
2.பாகற்காய் உடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
3.பாகற்காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜுரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும்.
4.பாகற்காய் எளிதில் ஜீரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும்.
5.கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது பாகற்காய் இயல்பாகும்.
6.பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. 7.பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
8.பாகல் இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
9.கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் நோய் ஓடியே விடும்
10.2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறி ஆரோக்கியம் பிறக்கும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News