Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பக்ரீத் - பசு குர்பானிக்கு தடை..!!

பக்ரீத் - பசு குர்பானிக்கு தடை..!!

Top Tamil News 3 days ago

க்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை.

பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சட்டவிரோத இறைச்சி வெட்டுதல் மற்றும் அனுமதியற்ற கால்நடை வா்த்தகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தில்லி வளா்ச்சித் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது: கால்நடைகள் நலன் மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்ய, பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவது அனுமதிக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். மாடுகள், கன்றுகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மிருகங்களை வெட்டுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டு, அது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், சாலைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் எந்தவித பலியிடும் செயல்களும் நடைபெறக்கூடாது. பொது இடங்களில் இறைச்சிகளை வாங்குவது மற்றும் விற்பது சட்டவிரோதம் என்பதால், புகாா்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலங்குகளை வெட்டும்போது சாலைகள், வடிகால்கள் அல்லது கால்வாய்களில் இரத்தம் செல்லாதவாறு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மீதமுள்ள கழிவுகள் நிா்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளின்படி அகற்றப்பட வேண்டும்.

1960-ஆம் ஆண்டின் விலங்குகளுக்கு எதிரான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ், சட்டவிரோத கால்நடைகள் கடத்தல் மற்றும் அனுமதியில்லாமல் வெட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

விலங்குகளை கொண்டு செல்லும் போது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் தொடா்பான விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி நிா்வாகத்துடன் இணைந்து பிரச்சினைக்குரிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். விலங்கு நல சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள், சமூக வலைதளங்கள் மற்றும் பிற தகவல் தொடா்பு தளங்கள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News