Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பதவிக்காக ஆசைப்படவில்லை" - எஸ்.பி. வேலுமணி

"பதவிக்காக ஆசைப்படவில்லை" - எஸ்.பி. வேலுமணி

Top Tamil News 1 week ago

ங்கள் கோரிக்கைகளை ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "எங்கள் கோரிக்கைகளை ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டார்.

எங்களது பொதுச்செயலாளர் இபிஎஸ்-தான் என எப்போதுமே கூறி வருகிறோம். எங்களுக்குள் பிளவு இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களையப்பட்டுள்ளது. பதவிக்காக நாங்கள் ஆசைப்படவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வெற்றிக்கான வேலையை செய்வோம். அதிமுக எங்கள் உயிர் மூச்சு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தோல்வி பற்றி ஆராய்ந்து கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை, திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஆதரவு அளித்தோம். நானும் சிவி சண்முகமும் சில கோரிக்கையை வைத்தோம். அதனை ஏற்றுக்கொண்டு கட்சியை பலப்படுத்துவோம்" என்றார்

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News