Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பட்டாசு வெடிக்க முயன்ற தவெகவினர்- பிடுங்கி எரிந்த போலீசார்

பட்டாசு வெடிக்க முயன்ற தவெகவினர்- பிடுங்கி எரிந்த போலீசார்

Top Tamil News 3 weeks ago

ட்டாசு வெடிக்க முயன்ற தவெகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார் பட்டாசை பிடுங்கியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக தோல்வியை சந்திக்கிறது திமுக . இதுவரை 10க்கும் மேற்பட்ட தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார். கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். குளித்தலை, அரவக்குறிச்சியில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்துவருகின்றனர்.

தமிழகத்தில் தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்ட தவெகவினர் விசில் மற்றும் பட்டாசுகளுடன் குவிந்தனர். பின் திடிரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் பட்டாசுகளை வெடிக்க முயன்றனர். அப்போது பணியில் இருந்த போலீசார் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளதாக கூறி தவெகவினரை தடுத்தனர். பின் பட்டாசுகளை போலீசார் பறித்து செல்ல முயன்ற போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தவெகவினர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News