Dailyhunt
#BIG BREAKING :ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி..!

#BIG BREAKING :ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி..!

Top Tamil News 2 weeks ago

சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த ஒரு முக்கியத் தொகுதியாகும்.

இது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது.

2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,73,456. ஆண் வாக்காளர்கள் 1,34,270. பெண் வாக்காளர்கள் 1,39,183. மூன்றாம் பாலினத்தவர்கள் 3. இத்தொகுதியில் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் 77.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில். திமுக சார்பில் தற்போதைய அமைச்சரும், 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவருமான கே. ஆர். பெரியகருப்பன் களமிறங்கினார். அதிமுக கூட்டணியின் இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் சார்பில் கே. சி. திருமாறனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

திருப்பத்தூர் வேட்பாளர்கள் பட்டியல் 2026

திமுக (DMK): பெரியகருப்பன் (தற்போதைய எம்எல்ஏ)

பாஜக (BJP): திருமாறன் (அதிமுக கூட்டணியில்)

நாம் தமிழர் கட்சி (NTK): ரம்யா மோகன்

தமிழக வெற்றி கழகம் (TVK): சீனிவாச சேதுபதி

திருப்பத்தூர் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்தார்.சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார் திருப்பத்தூரில் தவெக - திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், பெரிய கருப்பன் தோல்வி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News