Dailyhunt
#BIG BREAKING : வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுப்பு..!!

#BIG BREAKING : வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுப்பு..!!

Top Tamil News 2 weeks ago

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த ஆதரவர்கள் என அனைவரும் மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, அவர் மஞ்சள் துண்டை அகற்றிய பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை தெற்கு தொகுதியில் 1,88,878 வாக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அங்கு 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், தவெகவில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சியில் பேரறிவாளன் என்று மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது. இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பினார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பிரசாரத்தின்போதே கோவை தெற்கு தொகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. தமிழ்நாடே உற்று நோக்கும் தொகுதியாக மாறியது.

இந்நிலையில், 11 வார்டுகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளன.

சற்றுமுன் வந்த தகவலின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்து வருகிறார்..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News