Dailyhunt
#BIG NEWS : சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ - வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

#BIG NEWS : சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ - வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

Top Tamil News 5 days ago

ட்டோ ஓட்டுநர், விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தின் தலைவர் என 30 ஆண்டுகளாக சுழன்று வந்த விஜய் தாமு, தவெக சென்னை மாவட்டத் தலைவர் பணியாற்றி வந்தார்.

அவர் ராயபுரம் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
8ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி, ஓட்டு வீட்டில் வாழ்க்கை என சராசரி வாழ்க்கை நடத்தி வந்த தனக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கியதற்காக விஜயின் காலில் விழுந்து அதற்கான நன்றியையும் விஜய் தாமு தெரிவித்து இருந்தார்.அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எல்லாம் பெரிய திமிங்கலங்கள்.

ஒருபுறம் ஐந்து முறை அமைச்சர், சபாநாயகர் என அதிமுகவின் சென்னை முகமான ஜெயக்குமார். மறுபுறம் முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கானின் மகன் சுபேர் கான்.இப்படி இரு பெரும் போட்டியாளர்களை எதிர்த்து களம் கண்ட விஜய் தாமு, 14 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ராயபுரத்தை தன் வசப்படுத்தி உள்ளார். அதேநேரம் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் தவெக எம்எல்ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளில் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி உள்ளார். தவெக நிர்வாகி லயோலா மணி தடுத்தும் கேட்காமல் எம்எல்ஏ கேக்கை வாளால் வெட்டி கொண்டாடினார். அவர் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News