Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரான்சில் வெப்ப அலையால் 21,600 பேர் உயிரிழப்பு

பிரான்சில் வெப்ப அலையால் 21,600 பேர் உயிரிழப்பு

Top Tamil News 2 days ago

பிரான்சில் நிலவும் வரலாறு காணாத வெப்ப அலையால் இயல்பைவிட 5,800 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை வரலாறு காணாத வெப்ப அலை பிரான்சை தாக்கியது. இதில் 21,674 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் நிலவும் வரலாறு காணாத வெப்ப அலையால் இயல்பைவிட 5,800 பேர் அதாவது 36 சதவீத கூடுதல் இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு கோடை வெப்பத்திற்கு பிரான்சில் 15,000 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாட்களைக் கண்டது. அந்நாட்களில் நாட்டின் சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டியதுடன், பல மாநிலங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. ஜூன் 25 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை 1,999 பேர் அங்கு வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு 75 வயதுக்கு மேற்பட்டவர்களாவார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News