Dailyhunt
பொய் கூறி வாக்குசேகரிக்கும் ஈபிஎஸ்

பொய் கூறி வாக்குசேகரிக்கும் ஈபிஎஸ்

Top Tamil News 3 weeks ago

ஜானகி அம்மாள் மற்றும் காமராஜரை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுத்தார் என்று மீண்டும் மீண்டும் பொய்யை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

காமராஜர் கடந்த 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை அரசு முறைப்படி, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்து, பின்னர் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான். காமராஜரின் உடல் புதைக்கப்படவில்லை. காமராஜருக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதால், அவரது தங்கையின் பேரன் அவரது உடலுக்கு தீ வைத்துள்ளார்.

கிண்டியில் காந்தியின் பெயரில் உள்ள மண்டபத்திற்கு அருகிலேயே அவருக்கும் மண்டபம் கட்டப்பட்டது. காமராஜர் மண்டபம் கவனிப்பாரு அற்று இருந்த நிலையில் அவரின் பிறந்தநாள் அன்று கலைஞர் அவர்களே களத்தில் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினார். அவ்விடத்தில் அணையா விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஜானகி அம்மாள் வாரிசுகள் யாரும் மெரினாவில் இடம் வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. 'எம்.ஜி.ஆர். வீட்டு தோட்டத்தில் அரசுமுறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்' என்றுதான் வாய்வழி கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக்கோரிக்கைக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி உடனே செவிசாய்த்து "அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யலாம்" என்று உத்தரவிடுகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News