Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING 16ஆவது சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் உத்தரவு

#BREAKING 16ஆவது சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் உத்தரவு

Top Tamil News 2 weeks ago

திமுக தலைமையில் இருந்த 16 வது சட்டப்பேரவையை கலைத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். முதல்வராக விஜய் நாளை (07.05.2026) பதவியேற்க திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் விவரத்தை ஆளுநரிடம் வழங்கவில்லை. 118க்கு பதிலாக 112 பேர் மட்டுமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் விஜயால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால்தான் ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார். ஆகவே நாளை விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பில்லை. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருந்த 16 வது சட்டப்பேரவையை கலைத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே 5ஆம் தேதி முதல் சட்டமன்றம் கலைக்கப்படுகிறது. புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

1967ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் 4 வது சட்டசபையை அமைத்து திராவிட ஆட்சியை இங்கு தொடங்கியது. அதன்பிறகு 2021 தேர்தலில் திமுக வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து 16 வது சட்டசபையும் திராவிட ஆட்சியாகவே இருந்தது. இதில் அதிமுக 1977 ல் 6வது சட்டசபைதனை தலைமை தாங்கி, தொடர்ந்து பலமுறை தன் பங்கிற்கு திராவிட அரசியல் ஆட்சியை நடத்தி வந்தது. இன்று தவெக விஜய் அவர்களின் இமாலய வெற்றிக்குப்பிறகு, ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு 16 வது சட்டசபை கலைக்கப் பட்டு விட்டது. இதுவே 60 ஆண்டுகால திராவிட அரசியல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி ஆகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News