Dailyhunt
#BREAKING : FCRA சட்டத்திருத்தம் ஆபத்தானது - திமுக எம்.பி. வில்சன் பேட்டி..!

#BREAKING : FCRA சட்டத்திருத்தம் ஆபத்தானது - திமுக எம்.பி. வில்சன் பேட்டி..!

Top Tamil News 2 weeks ago

மீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த மசோதாவுக்கு முதன்முதலில் தன் எதிர்ப்பை பதிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் திமுக சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான வில்சன் எம்பி செய்தியாளர்கள் சந்திப்பில் FCRA சட்ட திருத்தம் குறித்தான விமர்சனத்தை முன் வைத்து இந்த சட்டத்தின் மீதான திமுகவின் எதிர்ப்பை உறுதிபடுத்தினார்.

தேசிய பாதுகாப்பு எனும் பெயரில கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் தேவையற்றது எனவும் வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் உரிமை புதுப்பிக்கப்படாத நிலையில் சொத்துக்களை மத்திய அரசே எடுத்துக் கொள்ள மசோதா வழிவகை செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.ஒன்றிய அரசு சட்டத்திருத்தத்தால் எவ்வித காரணமுமின்றி சிறுபான்மையின நிறுவனங்களை முடக்க முடியும்.அதாவது புதிய சட்டத்திருத்தம் மூலம் காரணமின்றி கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை மூட முடியும்.

கடந்த 75 ஆண்டுகளாக கல்வி முதல் ஆதரவற்றோர் பாதுகாப்பு வாழ்வாதாரம் என எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனங்களின் உரிமம் எந்த நேரத்திலும் மத்திய அரசால் திரும்ப எடுத்துக் கொள்ள முடியும் என்பதுடன் காரணம் இன்றி நன்கு இயங்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை மூட முடியும் .

தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டம் நிறைவேற்றப்படும் சூழல் வந்தால் கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் பல உதவிகள் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News