Dailyhunt
#BREAKING கணவரை காட்டிலும் குஷ்பூவுக்கு சொத்து அதிகம்

#BREAKING கணவரை காட்டிலும் குஷ்பூவுக்கு சொத்து அதிகம்

Top Tamil News 1 week ago

சுந்தர்.சிக்கு ரூ.17.7 கோடியில் அசையா சொத்து இருப்பதாக வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சுந்தர்.சி தனது மனைவி குஷ்பு, ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோருடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சுந்தர்.சி பெயரில் ரூ.2.97 கோடி அசையும் மற்றும் ரூ.17.7 கோடியில் அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. குஷ்பு பெயரில் ரூ.6 கோடி அசையும், ரூ.4.17 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன. சுந்தர்.சியிடம் கையிருப்பாக ரூ.50,600ம், குஷ்புவிடம் கையிருப்பதாக ரூ.30000 இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சியிடம் மனை நிலங்களாக 3 இடங்கள் மற்றும் குஷ்புவிடம் மனை நிலங்களாக 6 இடங்கள் உள்ளன. சுந்தர்.சி பெயரில் ரூ.4.12 கோடி கடனும், குஷ்பு பெயரில் ரூ.2.74 கோடி கடனும் உள்ளது. சுந்தர்.சி 11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.28 லட்சம் மதிப்பிலான டொயோட்டா கேம்ரி வாகனம் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News