Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING : ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றி கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி..!!

#BREAKING : ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றி கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி..!!

Top Tamil News 1 week ago

ந்திய ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023ஆம் ஆண்டின் மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இது பண மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன் முக்கிய நோக்கம், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிப்பதாகும்.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை நாடு முழுவது உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று எவ்வித சிரமமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, நேரடியாக வர முடியாதவர்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை தபால் (Post) மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தால், அந்த நோட்டுகளுக்கான சரியான மதிப்பு அவர்கள் குறிப்பிடும் (Bank Account) நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் ஆர்பிஐ அதிரடியாக விளக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News