Dailyhunt
#BREAKING : சிலிண்டர் பிரச்சனைக்கு முதலமைச்சர் டெல்லி செல்லாதது ஏன்? - விஜய்

#BREAKING : சிலிண்டர் பிரச்சனைக்கு முதலமைச்சர் டெல்லி செல்லாதது ஏன்? - விஜய்

Top Tamil News 1 week ago

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பின் விஜய் பேசியதாவது,

சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், எல்லாருக்கும் சிலிண்டர் கிடைக்கிறதா என மக்களிடம் விசாரித்தார். கேஸ் புக் செய்தால், புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டுக்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்னை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன? மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கையாக இருக்கவில்லை. குடும்ப பிரச்சனைக்கு டெல்லி செல்லும் ஸ்டாலின், ஏன் சிலிண்டர் பிரச்சனைக்கு டெல்லி செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். 100 சதவீதம் தூய்மையான ஆட்சியை தவெக வழங்கும். இந்த விஜய்யை நம்பி ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க என கேட்டு கையெடுத்து கும்பிட்டார் வாக்கு சேகரித்தார்.

திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார் நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ஏமாற்றுகிறார். நகராட்சித் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்றால் மற்ற துறை பாருங்க என கூறிய இவர், திமுகவும், பாஜகவும் வேறு வேறு கூட்டணி இல்லை. திமுகவையும் நம்பாதீர்கள் பாஜகவையும் நம்பாதீர்கள் என கூறினார்.

தன்னந்தனி ஆளு நான் ஒரு ஆளு என்று தொடங்கும் பாட்டு பாடி ஓட்டு கேட்டார் விஜய். உங்க விஜய் நான் வரேன், விசில் அடிக்க நீங்க ரெடியா என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். வரும் 23ஆம் தேதி விசில் சின்னத்தில் பட்டனை அழுத்துங்க என்று வாக்குசேகரித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News