Dailyhunt
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு திருப்பம்! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ரங்கசாமி

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு திருப்பம்! எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ரங்கசாமி

Top Tamil News 1 week ago

புதுச்சேரியில் 2 தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.

பதவியை ராஜினாமா செய்கிறார்.

புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த 2 தொகுதிகளில் ஒரு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு இடைத்தேர்தல் நடக்கவேண்டும். அதற்கு தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார்.‌ முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு ராஜினாமா கடிதம் அளிப்பார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கும்.

தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுவார். முதல் அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது வாக்காளர்களிடம் பேசினார். அப்போது அவர், தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News