Dailyhunt
"ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு"- சமூக வலைதளத்தில் பரவும் ஆடியோவுக்கு ஆ.ராசா விளக்கம்

"ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு"- சமூக வலைதளத்தில் பரவும் ஆடியோவுக்கு ஆ.ராசா விளக்கம்

Top Tamil News 2 weeks ago

றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தான் பேசியதாக சமூகவலைதளங்களில் ஆடியோ பரவும் நிலையில் திமுக எம்பி ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக பதவி பெற்ற அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் அருகதையற்ற எடப்பாடி பழனிச்சாமி, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும் மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அவர்களைப் பற்றியும் தேர்தல் நேர அரசியல் ஆதாயத்திற்காக அவதூறாகப் பேசுவது அரசியல் அநாகரிகமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது. மகாகவி பாரதியின்' பாஞ்சாலி சபத' வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன,
"ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!"" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News