Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

Top Tamil News 2 weeks ago

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிறுமாங்காடு கிராமத்தில் பனை மரத்தில் நுங்கு பறித்தபோது அருகில் இருந்த மின்சாரம் கம்பியில் இரும்பு கம்பியில் உரசியதில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் (17), தட்சணாமூர்த்தி (17) ஆகிய இரு மாணவர்களும் தங்கள் நண்பர்களுடன் மின் கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நுங்கு மின்மாற்றியின் வயரில் சிக்கியது. அதை எடுக்க இரும்பு கொம்பு மூலம் எடுத்து உள்ளனர். இதில் இருவர் மீதும் திடீரென சின்சாரம் பயந்து தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News