Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது..!

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது..!

Top Tamil News 2 days ago

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று மீன் பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா அருகே கைது செய்தனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் இலங்கை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடுகடலில் மீனவர்கள் 9 கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News