Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்னாச்சு..? கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..!

என்னாச்சு..? கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..!

Top Tamil News 3 hrs ago

மைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் இரவு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோயம்புத்தூர்- அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைச்சருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. எனினும், உடல்சோர்வுக் காரணமாக நாளை வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளோம். நாளை (மே 25) காலை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அமைச்சர் தற்போது முழு உடல்நலத்துடன் உள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News