Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹார்முஸ் ஜலசந்தி எங்களது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது - அதிபர் டிரம்ப்..!!

ஹார்முஸ் ஜலசந்தி எங்களது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது - அதிபர் டிரம்ப்..!!

Top Tamil News 2 days ago

வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ங்கள் படையினர் முற்றுகையின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி எங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது.இல்லையெனில் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அணுப் பொருட்களை ஈரான் வைத்திருப்பதை அமெரிக்கா அனுமதிக்காது.நாங்கள் அதைப் பெறுவோம்; அதைப் பெற்ற பிறகு நாங்கள் அதை அநேகமாக அழித்துவிடுவோம், ஆனால் அதை அவர்கள் எடுத்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அங்கு தடையின்றி கப்பல் போக்குவரத்து இயங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், சுங்கக் கட்டணங்கள் வேண்டாம். அது சர்வதேசமானது,

அது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News