Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி..!!

இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி..!!

Top Tamil News 12 hrs ago

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-

நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி, மத்திய அரசாங்கம் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுருந்தார்கள்.

எனினும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று பிம்பத்தை பரப்ப கூடிய சூழலில் ,

இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மத்திய அரசாங்கம் எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது என்ற சூழ்நிலையில் இருந்ததை, நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பெற்றிருக்கக்கூடிய வெற்றி.

மேலும் அடுத்த கோரிக்கையாக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை அதுவே. இதில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாங்களும் வெற்றி அடைவோம்.

மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News