Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இன்னும் ரவி தோழி கூட தான் இருக்காரு... அவங்க தமிழ்நாட்ட விட்டு போகல"- ஆர்த்தியின் தாயார்

"இன்னும் ரவி தோழி கூட தான் இருக்காரு... அவங்க தமிழ்நாட்ட விட்டு போகல"- ஆர்த்தியின் தாயார்

Top Tamil News 1 week ago

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்டர்வியூவ பாத்து நான் அழுதுட்டேன்.. அவர் பாருங்க அவங்க அப்பாவ பத்தி எவ்ளோ பெருமையா பேசுறாரு என ஆர்த்தியின் தாயார் கண்ணீருடன் பேட்டியளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிமோகனின் மாமியார் மற்றும் ஆர்த்தியின் தாயார், "இப்படி ஒரு தீர்ப்பு கொடுத்ததுக்கு அந்த நீதிபதிக்கு பெரிய கும்பிடு... ஆர்த்தி, ஜெயம்ரவி மற்றும் அவர்களது 2 மகன்கள் மாசத்தில் ஒரு சனி, ஞாயிறு சந்திக்க வேண்டும் என இப்போது வந்திருக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது. இதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நியாயம். ஏனெனில் 2 ஆண்டுகளாக அனைவரும் பார்க்க வேண்டும், உட்கார்ந்து பேச வேண்டும், இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டுமென முயற்சி செய்தோம். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த வாய்ப்பை கொடுத்த நீதிபதிக்கு நன்றி.

எந்த தாயும் தன் பசங்கள பிரிக்கணும்னு நினைக்க மாட்டாங்க.. திருட்டு தனமா ஒண்ணும் கல்யாணம் பண்ணல.. 10 ஆயிரம் பேர கூப்பிட்டு, 10 நிகழ்ச்சி நடத்தி கல்யாணம் பண்ணோம்.. அப்படி இருக்க நாங்க ஏன் பிரிக்கணும்னு நினைக்க போறோம்... மாமியார் என்றதுனால மட்டும் நான் நல்லவளா இல்லாம போய்டுவேனா? எத்தன இன்டர்வியூல அவங்க என் மாமியார் இல்ல என் அம்மானு சொல்லிருக்காரு... அதை இல்லனு சொல்ல முடியுமா?.. இன்னும் அவர் தோழி கூட தான் இருக்காரு.. அவங்க தமிழ்நாட்டை விட்டு போகல. ஆர்த்தி தனியா 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டாங்கனு சொல்றது பொய்.. பசங்களோட படிப்பு செலவு, சாப்பாடு, கடன் வேற இருக்கு எல்லாத்தையும் சேத்து தான் இந்த அமௌன்ட்.. பசங்கள பாக்க கூடாதுனு நாங்க சொல்லவே இல்ல... முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்டர்வியூவ பாத்து நான் அழுதுட்டேன்.. அவர் பாருங்க அவங்க அப்பாவ பத்தி எவ்ளோ பெருமையா பேசுறாரு" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News